கேரள மாநிலம் திருவனந்தபுரம் பூவார் காஞ்சிரம்குளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் முருகன் (68) மனைவி இறந்த பிறகு, மாற்றுத்திறனாளி மகனைக் கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து சில தரகர்களை சந்தித்தார். அப்போது அஸ்வதி அச்சு (39) என்ற பெண் பழக்கமாகி உள்ளார். அஸ்வதி தனக்கு ரூ. 40 ஆயிரம் கடன் இருக்கிறது. அதை தருவதென்றால் முருகனை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறி உள்ளார். இதை நம்பிய முருகன் முதலில் 25000 ரூபாய் கொடுத்தார். சப்-ரிஜிஸ்தரார் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்ய பூவாரு வந்தபோது மீண்டும் ரூ.15 ஆயிரம் கொடுத்தார். ஆனால் அன்றைய தினம் நெட் இணைப்பு இல்லாததால் பதிவு நடைபெறவில்லை.
அஸ்வதியை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றபோது, பணம் கிடைக்கவில்லை என அஸ்வதி மறுத்து உள்ளார். இதை தொடர்ந்து முருகன் பூவார் போலீசில் புகார் அளித்தார்.இதை தொடர்ந்து போலீசார் அஸ்வதியை கைது செய்தனர்.
கொல்லத்தை சேர்ந்த அஸ்வதி, மனைவியை இழந்தவர்களை குறி வைத்து, அவர்களையே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல பண மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளது அம்பலமானது. போலீஸ் விசாரணையில் கூறப்படுவதாவது:
ஆபாசமாக சேட்டிங் செய்வதுதான் அஸ்வதியின் ஒரே ஆயுதம். ஆபாசமாக பேசியே நெருக்கமாகிவிடுவதுடன், ஆன்லைன் மூலம் அவர்களிடம் பணத்தை கறந்துவிடுவாராம். அப்படித்தான் கொல்லம் ரூரல் எஸ்.ஐ ஒருவர், அஸ்வதியின் அழகில் மயங்கியுள்ளார். விடிய விடிய ஆபாச சாட்டிங்கும் செய்துள்ளார். ஒரே இரவில் 1 லட்சம் ரூபாய் வரை பறிகொடுத்துள்ளார். இதுபோல பல புகார்கள் அஸ்வதி மீது குவியவும், அவரது வங்கிகணக்கில் பயன்படுத்தப்பட்ட செல்போன் நம்பரை வைத்து, அஸ்வதியை போலீசார் திருவனந்தபுரத்தில் கைது செய்தனர்.
3 வருடங்களுக்கு முன்பு, முன்னாள் தேவசம்போர்டு அமைச்சரும், அஸ்வதியின் விலையில் விழுந்து ஏமாந்து போனவர்தானாம். அதுமட்டுமல்ல, கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ ஒருவரும் அஸ்வதியின் லீலையில் விழுந்தவர்தான் என்பது, தற்போது பரவிவரும் ஆடியோ லீக் மூலம் தெரியவந்துள்ளது. ஏதோ ஒரு வழக்கை விசாரிக்க போய், கடைசியில் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, இந்த பெண்ணின் ஒவ்வொரு லீலைகளும் வெளியே வந்து கொண்டிருக்கிறது. கடந்த 5 வருடங்களுக்கு மேலாக, பேஸ்புக்கில் அஸ்வதியின் மோசடிகள் நடந்துள்ளன. இவரிடம் விழுந்தவர்கள் எல்லாருமே வயதானவர்கள். இவரிடம் ஏமாந்த வயதானவர்களில் பெரும்பாலானோர் ரிடையர் ஆபீசர்ஸ் என்கிறார்கள். அதனால், அவர்கள் யாருமே புகார் கொடுக்க முன்வராத நிலையில், ஒருசிலர் மட்டுமே புகார் தந்துள்ளனர்.
அஸ்வதியிடம் விசாரணை நடந்து வருகிறது. அதேபோல, 68 வயது முதியவர் ஒருவரும் அஸ்வதியிடம் சிக்கி உள்ளார். அஸ்வதியின் போட்டோவை பார்த்ததுமே, “நைஸ்” என்று கமெண்ட் செய்தாராம்.. இந்த ஒரு கமெண்ட்டை செய்துவிட்டு, 40 ஆயிரம் ரூபாய் அஸ்வதியிடம் இழந்துவிட்டார். அதாவது 68 வயது தாத்தாவையும் கல்யாணம் செய்வதாக சொல்லி, 40 ஆயிரம் பறித்துள்ளார் அஸ்வதி.