கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ரத்னாகரன், போலீஸ் துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மகள் அப்சரா, பிரபல மலையாள தொலைக்காட்சி தொடர் நடிகை. அத்துடன் மலையாள பிக் பாஸ் சீசன் 3-ல் பங்கேற்று பிரபலமானார். பல தொலைக்காட்சி தொடர்களில் வில்லி வேடத்தில் நடித்து வருகிறார்.
இவரது தந்தை ரத்னாகரன் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்த போது விபத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து வாரிசு அடிப்படையில் அப்சராவுக்கு போலீஸ் துறையில் வேலை கிடைத்துள்ளது. இதற்கான ஆர்டரும் வந்து விட்டது. விரைவில் அவர் காவல்துறை பணியில் சேருகிறார்.
இதுகுறித்து அப்சரா கூறுகையில், “கலைத்துறையில் பயணிப்பதால் எனக்கு போலீஸ் துறையில் சேர விருப்பம் இல்லை. ஆனால் அரசு பணி என்பது நிரந்தர வேலை என்பதால் எனதுகணவர் மற்றும் குடும்பத்தினர் இதில் சேர வற்புறுத்தி வருகிறார்கள். வேலையில் சேருவதற்கான அரசு ஆணையும் கிடைத்து விட்டது. விரைவில் போலீஸ் துறையில் அலுவலக பணியில் சேர இருக்கிறேன் என்றார்.