Skip to content

பொங்கல் தினத்தில் நடக்க இருந்த கேந்திரிய வித்யாலயா தேர்வு தேதி மாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய  வித்யாலயா பள்ளிகளில்  இன்று 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை 6 முதல் 11ம் வகுப்புவரை  தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த நாட்களில் தமிழ்நாட்டில் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. எனவே தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என மதுரை சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை விடுத்திருந்தார். இதை ஏற்று  13ம் தேதி முதல் 16ம் தேதிவரையிலான தேர்வு ரத்து செய்யப்படும் என கேந்திரிய  வித்யாலயா நிறுவனம் அறிவித்து உள்ளது.  மறுதேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்த தகவலை  வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!