Skip to content
Home » கெஜ்ரிவால் வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடியா? ஆம் ஆத்மி பதிலடி

கெஜ்ரிவால் வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடியா? ஆம் ஆத்மி பதிலடி

  • by Authour

டில்லியில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று கூறும்போது, ஆம் ஆத்மி கட்சியை தலைமையேற்று செல்லும் கெஜ்ரிவால், நேர்மை மற்றும் எளிமை ஆகியவற்றை ஊக்குவிப்பேன் என அரசியலில் நுழையும்போது அளித்த தனது வாக்குறுதிக்கு துரோகம் இழைத்து விட்டார் என குற்றச்சாட்டாக கூறியுள்ளார். கெஜ்ரிவாலை ஒரு மகாராஜா என கூறியதுடன், ஆடம்பரம் மற்றும் வசதி ஆகியவற்றிற்கு ஆசைப்படுபவர் என்றும் தெரிவித்து உள்ளார். தொடர்ந்து அவர் தன்னிடம் உள்ள ஆவணங்கள் அடிப்படையில் கூறும்போது, கெஜ்ரிவாலின் இல்லம் வியட்நாம் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட மார்பிள் கற்கள், லட்சக்கணக்கான மதிப்பிலான திரை சீலைகள் மற்றும் முன்பே வடிவமைக்கப்பட்ட மர சுவர்கள் ஆகியவற்றை கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.

ஒரேயொரு திரை சீலை மட்டுமே ரூ.7.94 லட்சத்திற்கு கூடுதலான விலை பெறும். இதுவே வெட்கமில்லாத அரசரின் கதை என கூறியுள்ளார். பிரதமர் மோடியின் கல்வி தகுதி பற்றிய சந்தேகங்களை அவர் வந்து தெளிவுப்படுத்தும்படி கூறிய கெஜ்ரிவால், தனது இல்லத்தின் புதுப்பிப்பு பணிகள் பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தி பதிலளிக்கட்டும் என்றும் பத்ரா கூறியுள்ளார்.

இதற்கு கெஜ்ரிவால் தரப்பில் இருந்து உடனடி பதில் வரவில்லை. ஆனால், முன்பிருந்த கெஜ்ரிவால் வீட்டின் நிலை பற்றிய தகவலை பா.ஜ.க. மறைக்கிறது என கூறி, அதுபற்றிய வீடியோக்களை அவரது ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது.அதன்பின்பு, நண்பர் டொனால்டு டிரம்ப்பின் 3 மணிநேர பயணத்திற்கு ரூ.80 கோடி செலவிடப்பட்டு உள்ளது. குஜராத் மற்றும் மத்திய பிரதேச முதல்-மந்திரிகள் ரூ.200 கோடி மதிப்புள்ள விமானங்களில் பறக்கின்றனர். இதுபற்றி விவாதிக்க எந்தவொரு ஊடகத்திற்கும் தைரியம் இல்லை என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கார் டுவிட்டரில் பதிலடி தெரிவித்து உள்ளார். கெஜ்ரிவாலுக்கு 1942-ம் ஆண்டு கட்டப்பட்ட பங்களாவை ஒதுக்கினர். அதன் மேற்கூரை 3 முறை இடிந்து விழுந்து விட்டது. அதில் ஒரு முறை மக்கள் தர்பார் நடந்து கொண்டிருந்தது.  கெஜ்ரிவால் ரூ.45 கோடி மதிப்பிலான அரண்மனையை கட்டியுள்ளார் என பா.ஜ.க. ஊடகம் கூறுகிறது. நீங்கள் இந்த அரண்மனையை எடுத்து கொள்ளுங்கள். உங்களுடைய ஏழ்மையான வீட்டை கெஜ்ரிவாலுக்கு கொடுத்து விடுங்கள் என்றும் பிரியங்கா தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *