டில்லி மதுபான கொள்கை வழக்கில் முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளது. சர்க்கரை நோயாளியான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி போட அனுமதி கோரிய வழக்கு டில்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்; சிறையில் உள்ள கெஜ்ரிவால் நவராத்ரி பூஜை பிரசாதமான ஆலு பூரி ஒரு முறையும், மாம்பழம் மற்றும் சர்க்கரை இல்லாத இனிப்புகளை 3 முறை மட்டுமே சாப்பிட்டதாக வாதிட்டார். அதோடு சர்க்கரை இல்லாத தேநீரையே அவர் அருந்தியதாகவும் குறிப்பிட்டார். ஆனால் சர்க்கரை அளவை அதிகரித்து ஜாமீன் பெற முயற்சிப்பதாக அமலாக்கத்தித்துறை கூறுவது அபத்தமானது , கெஜ்ரிவால் குற்றவாளி கிடையாது என்றும்,
அவர் தமது மருத்துவரிடம் 15 நிமிடங்கள் கூட வீடியோ கான்பரன்சிங் மூலம் பேச முடியவில்லை என்றும் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.