ஜூன் 2ம் தேதி ஆஜராக வேண்டும் என்கிற உத்தரவை ரத்து செய்து மேலும் ஒரு வாரத்திற்கு இடைக்கால ஜாமீனை நீடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மனு செய்திருந்தார். அவரது மனுனை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இது தொடர்பான மனுவை கீழமை நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கும்படி கூறியுள்ள உச்சநீதிமன்ற பதிவாளர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முன்னதாக இடைக்கால ஜாமின் முடிந்து வரும் 2-ம் தேதி சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் உடல்நிலையை கருத்தில் கொண்டு மேலும் 7 நாட்கள் ஜூன் 9 வரை இடைக்கான ஜாமினை கோரியிருந்தார்.