டில்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலும் தோல்வியை தழுவினார். அதே நேரத்தில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மீது பஞ்சாப் மாநிலத்தில் அதிருப்தி வதந்திகள் பரவி வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், அம்மாநில மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் டில்லியில் உள்ள கபுர்தலா இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
சமீபத்திய டில்லி தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சியின் செயல்திறனை மறுபரிசீலனை செய்வது மற்றும் 2027ம் ஆண்டு பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான திட்டமிடல் குறித்து இங்கு ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பஞ்சாப் மாநிலத்தில் காலியாக உள்ள லூதியானா சட்டசபை தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது.