டில்லி மதுபானக் கொள்கை மோசடி வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் முறையிட்டுள்ளார். இவ்வழக்கு விசாரணை இன்று நீதிபதி சஞ்சீவ் கண்ணா முன்பு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், கெஜ்ரிவால் விவகாரத்தில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. அப்படி பறிமுதல் செய்து இருந்தால், கெஜ்ரிவால் எப்படி இந்த முறைகேட்டில் ஈடுபட்டார் என்பதை விளக்க வேண்டும்.
மணீஷ் சிசோடியா தொடர்புடைய இந்த வழக்கில், அவரிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் கெஜ்ரிவால் வழக்கில் எதுவும் காட்டப்படவில்லை. தேர்தலுக்கு முன்பு கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் என விளக்கமளிக்க வேண்டும்.
இந்த வழக்கில் சட்ட நடவடிக்கை துவங்குவதற்கும், கைது நடவடிக்கைக்கும் இடையே நீண்ட இடைவெளி ஏன் என்பது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
