அரியலூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் அய்யனார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது… தமிழ்நாடு மின்சார வாரியம், அரியலூர் கோட்டம், திருமானூர் உபகோட்டம், கீழப்பழுவூர் பிரிவு அலுவலகம், தற்போது வாடகை கட்டிடத்தில் கீழப்பழுவூர் நடுராஜா வீதியில் இயங்கிக் கொண்டு வந்தது. கட்டிட உரிமையாளர் இடத்தை விற்றுவிட்டதாலும், அலுவலக கட்டிடத்தை காலிசெய்ய சொல்வதாலும், அலுவலக கட்டிடத்தை வாடகை கட்டிடத்திலிருந்து, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான கீழப்பழுவூர் 33/11 KV துணைமின் நிலையத்தில் உள்ள அலுவலக கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்து, கீழப்பழுவூர் பிரிவு அலுவகம் கீழப்பழுவூர் துணைமின்நிலைத்தில் 16. 12.2024 முதல் இயங்க உள்ளது என்பதனை அரியலூர் செயற்பொறியாளர் அய்யனார் தெரிவித்துள்ளார்.