ஆண்டு வருமானம் அதிகமாக உள்ளவர்கள், முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, பெறுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதில்லை. –
அமைச்சர் கீதா ஜீவன் திருச்சியில் பேட்டி..
தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருச்சி திண்டுக்கல் கரூர் புதுக்கோட்டை அரியலூர் பெரம்பலூர் என 6மாவட்டங்களை இணைத்து மண்டல அளவிலான அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கூறுகையில்…
தகுதி வாய்ந்த மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இ-சேவை மையங்களில் மேல்முறையீடு தொடங்கிய முதல் இரண்டு நாட்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், தற்போது சர்வர் கோளாறு உள்ளிட்டவை சரி செய்யப்பட்டு மகளிர் உரிமைத்தொகை தொடர்பான பணிகள் தொய்வின்றி நடைபெற்றுக் கொண்டுள்ளது. இ-சேவை மையங்கள் மூலம் நடைபெறும் சிறப்பு
முகாம்களே போதுமானது.
ஆண்டு வருமானம் அதிகமாக உள்ளவர்கள், முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, பெறுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதில்லை.
ஆதார் எண், வங்கி கணக்கு எண் இணைப்பில் உள்ள தவறு காரணமாக சிலருக்கு மாற்று வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதனையும் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தேர்தல் வாக்குறுதியில் கூறியதைப் போல் அனைத்து மகளிர்க்கும் மாதம் ஆயிரம் வழங்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்..
அதிக வருமானம் பெறுபவர்களுக்கு இந்த ஆயிரம் ரூபாய் என்பது பெரிதாக இருக்காது அதனால் தகுதி வாய்ந்த மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது என்றார்.
இக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஆணையர் அமுதவல்லி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர் மற்றும் குழும இயக்குனர் சந்திரகலா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை கூடுதல் இயக்குனர் கார்த்திகா, இணை இயக்குனர் உமாதேவி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.