தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான இருப்பவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. தற்போது தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்த ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். அண்ணன் – தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘வேதாளம்’ படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். இந்த படத்தில் அஜித்தின் தங்கையாக லஷ்மி மேனனும், கதாநாயகியாக ஸ்ருதிஹாசனும் நடித்திருந்தனர்.
இந்த படம் ‘போலா சங்கர்’ என்ற தலைப்பில் தெலுங்கில் உருவாகி வருகிறது. மெஹர் ரமேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை ஏகே எண்டர்டைமண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. அஜித் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை தமன்னா கதாநாயகியாகவும், கீர்த்தி சுரேஷ் தங்கை கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தின் ப்ரோமோ பாடல் ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது. அந்த படப்பிடிப்பில் சிரஞ்சீவி, தமன்னா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கலகலப்பாக பேசி வரும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கீர்த்தி சுரேஷ் கழுத்தை பிடித்து நெரிக்கும் காட்சி ஒன்று உள்ளது. இந்த வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.