பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை 15 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. அந்த காதலுக்கு இருவீட்டிலும் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். இதையடுத்து வருகிற 12-ம் தேதி கீர்த்தி சுரேஷுக்கும், ஆண்டனிக்கும் கோவாவில் திருமணம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை இந்து முறைப்படி திருமணம் நடக்கிறது. அன்று மாலையே தேவாலயத்தில் வைத்து கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் நடக்கவிருக்கிறது. கீர்த்தி சுரேஷ்க்கு ஒரே நாளில் இரண்டு முறை திருமணம் நடைபெறுகிறது. ஆண்டனி கிறித்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த ஏற்பாடு என கீர்த்தி சுரேஷ் தரப்பில் கூறப்படுள்ளது.