சொக்க வைக்கும் அழகில் இருக்கும் போட்டோக்களை நடிகை கீர்த்தி ஷெட்டி வெளியிட்டுள்ளார்.
வியக்க வைக்கும் அழகால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. தென்னிந்தியாவில் இளம் நடிகையாக இருக்கும் அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதற்கு காரணம் அவர் தெலுங்கில் நடித்த முதல் படமான ‘உப்பென்னா’ தான். புச்சிபாபு இயக்கத்தில் வெளியான அந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
அதன்பிறகு லிங்குசாமி மற்றும் ராம் பொத்தினேனி கூட்டணியில் வெளியான இயக்கத்தில் ‘தி வாரியர்’ படத்தில் நடித்தார். பின்னர் பங்கா ராஜூ, ஷ்யாம் சிங்கா ராய் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள ‘கஸ்டடி’ படத்தில் நாகசைதன்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். அதேபோன்று தமிழிலும் ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
குறுகிய காலத்தில் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட சில மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் ‘கஸ்டடி’ ப்ரோமோஷன் நிகழ்ச்சி பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட கீர்த்தி ஷெட்டியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அழகிய லுக்கில் இருக்கும் அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறது.