சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கீழடி அருங்காட்சியகம். கடந்த 2015-ஆம் ஆண்டு அங்கு அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. 8 கட்டங்களாக நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி தொன்மையான பொருட்கள், தமிழர்களின் வீரத்தை பறைசாற்றை பொருட்கள், வாழ்க்கை முறைகள் குறித்த பல்வேறு விஷயங்கள் கண்டறியப்பட்டது.
அரிதாக கிடைக்கப்பெற்ற இந்த பொருட்களை வைத்து அருங்காட்சியகம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தை சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் இந்த அருங்காட்சியகத்தை பலரும் பார்த்து வரும் நிலையில் நடிகர் சூர்யா, சிவகுமார், ஜோதிகா மற்றும் குடும்பத்தினர் சுற்றி பார்த்தனர்.
அப்போது கீழடி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பழங்கால பொருட்கள் குறித்து சூர்யாவிற்கு ஊழியர்கள் விளக்கமளித்தனர். அதோடு கணொளி வாயிலாக தமிழர்களின் கலை, பண்பாடு குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது சூர்யாவுடன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.