Skip to content
Home » ஈரோடு இடைத்தேர்தல் போட்டியிட தயாரா? அண்ணாமலைக்கு ஆப்பு வைக்கிறார் காயத்ரி

ஈரோடு இடைத்தேர்தல் போட்டியிட தயாரா? அண்ணாமலைக்கு ஆப்பு வைக்கிறார் காயத்ரி

ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் சவால் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன். நான் உங்களை எதிர்த்து நிற்பேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டில்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா? நான் தோற்றால் 5 நிமிடத்தில் நீங்கள் முதல்வராகி ஆட்சியை மாற்றலாம். நான் தமிழ்நாட்டின் மகள், நீ தமிழகத்தின் மகன். தமிழகமா அல்லது தமிழ்நாடா என்று பார்ப்போம் என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *