உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் ஒரு வாரத்திற்கு மேலாக தீவிர பயிற்சி மேற்கொண்டனர். இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பொதுவான இடத்தில் மோதுவது இதுவே முதல் முறை. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தொடங்கி உள்ளது. இந்திய வீரர் ஷமி முதல் ஓவரை வீசினார். ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர், கவாஜா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
4வது ஓவரை இந்திய வீரர் சிராஜ் வீசினார். அப்போது ஆஸ்திரேலிய வீரர் கவாஜா அடித்த பந்து விக்கெட் கீப்பர் பரத்திடம் கேட்ச் ஆனது. இதனால் காஜா டக் அவுட் ஆனார். அதாவது 3.4 ஓவரில் ஆஸ்திரேலிய 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஒரு விக்கெட்டை பறிகொடுத்தது. கவாஜாவுக்கு பதில் லபுசேன் களம் இறங்கினார்.
கடந்த 2ம் தேதி ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் ஏராளமானோர் பலியானார்கள். இதற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரு நாட்டு வீரர்களும் கைியல் கருப்பு பட்டை அணிந்திருந்தனர். இந்திய அணியில் சுழல் பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் இடம்பெறவில்லை.