திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் பயிலும் பதினொன்றாம் வகுப்பு மாணவி யாழினி தர்மபுரி மாவட்டத்தில் இணையதளம் வழியாக நடைபெற்ற கவிதை , பட்டிமன்றம்,பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று பல்வேறு சான்றிதழ்களை பெற்றுள்ளார்.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான சூரியனின் விடியல் விருதான கவிப் பூமாலை விருது மாணவி யாழினிக்கு வழங்கினர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100 வது பிறந்தநாளை முன்னிட்டு தர்மபுரியில் உள்ள அறம் அன்பின் அடையாளம் அறக்கட்டளையின் சார்பில் சூரியனின் 2023- ம் ஆண்டுக்கான விடியல் விருது வழங்கும் நிகழ்வு அறிவித்தனர்..
இதற்காக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ,மாணவிகள் தங் கள் சான்றிதழ்களை சூரியனின் 2023-ம் ஆண்டுக்கான விடியல் விருதிற்கு சமர்பித்தனர். இதில் பங்கேற்ற ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியின் பதினொன்றாம் வகுப்பு பயிலும் சமயபுரத்தைச் சேர்ந்த மாணவி யாழினி கவிதை போட்டியில் பங்கேற்ற சான்றிதழை சமர்பித்தார்.
இதில் மாணவி யாழினிக்கு சூரியனின் 2023-ம் ஆண்டுக்கான விடியல் விருதான கவிப் பூமாலை விருதை வழங்கினார். சூரியனின் 2023-ம் ஆண்டுக்கான விடியல் விருதான கவிப் பூமாலை விருதை
பெற்று பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த மாணவி யாழினியை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.