தஞ்சாவூர் மாவட்டம் சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் – பரிமளா தம்பதியின் மூன்றாவது மகள் கவிபாலா,12,. பள்ளத்துார் அரசு மேல்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில், குடற்புழு நீக்கும் (அல்பென்டசோல்) மாத்திரை மாணவர்களுக்கு அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் குழுவினரால் வழங்கப்பட்டுள்ளது.
மதியம் 12 மணியளவில் மாத்திரையை சாப்பிட்ட, கவிபாலா மதியம் பள்ளியில் விளையாடிக்கொண்டிருந் போது, திடீரென மயங்கி விழுந்ததார்.
உடனடியாக ஆசிரியர் துரைசிங்கம் மற்றும் வீரமணி ஆகியோர் கவிபாலாவை அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கிருந்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
அவரை, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில், டாக்டர்கள் பரிசோதித்த போது, மாணவி கவிபாலா ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மாணவி கவிபாலா இறந்த செய்தி அறிந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், மிகுந்த வருத்தம் அடைந்தார். இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அத்துடன் கவிபாலாவின் பெற்றோருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.