கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்தில் ஆழியார் கவியருவி உள்ளது
கடந்த ஜனவரி மாதம் முதல் அருவி நீரின்றி வறண்டு காணப்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வந்தனர்
இதனையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது இதனால் வறண்ட அருவியில் நீர் பெருக்கெடுத்து ஓடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது
இந்த நிலையில் தற்பொழுது அருவியில் சீரான நீர் வரத்து வந்து கொண்டிருப்பதால் ஆறு மாதத்திற்கு பிறகு ஆழியார் கவியருவி இன்று காலை வனத்துறையினர் பூஜைகள் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் தற்பொழுது ஆனந்த குளியல் போட்டு மகிழ்ச்சியுடன் செல்கிறார்கள்.