Skip to content
Home » காவல் வனம் துவக்க விழா… மரக்கன்றுகளை நடவு செய்த கோவை கமிஷனர்…

காவல் வனம் துவக்க விழா… மரக்கன்றுகளை நடவு செய்த கோவை கமிஷனர்…

  • by Senthil

கோவை மாநகர ஆயுதப்படை உடற்பயிற்சி கூட வளாகத்தில், காவல் வனம் என்ற பெயரில் மரம் நடும் விழா நடைபெற்றது. கோவை மாநகர காவல்துறை மற்றும் சிறுதுளி என்ற தனியார் தன்னார்வ அமைப்பும் இணைந்து நடத்திய இவ்விழாவை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

இங்கு சுமார் 750 மரக்கன்றுகள் மியாவாக்கி முறையில் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், பல்வேறு வகையான 750 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது எனவும், இம்மரங்களை பராமரிக்க சிறுதுளி அமைப்பு உதவுவதாகவும் கூறினார்.

ஏற்கனவே 1500 மரங்கள் இவ்வளாகத்தில் இருக்கின்ற நிலையில், அதோடு சேர்த்து இம்மரங்களும் சுற்றுபுற சூழலை மேம்படுத்த உதவும் என நம்புவதாக கூறினார்.

முதலமைச்சரின் ஆணையின் படி துடியலூர் மற்றும் வடவள்ளி காவல் நிலையங்கள் நாளை முதல் கோவை மாநகர காவல்துறையுடன் இணைக்கப்பட உள்ளது எனவும் எனவே அக்காவல் நிலையங்களுக்கு கூடுதல்

காவலர்களை கொண்டு குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யவும் போக்குவரத்தை சீர் படுத்துவதற்கும் இந்த இணைப்பு உதவியாக இருக்கும் என்றார்.

மேலும் குற்றவாளிகள் மாநகரில் ஒரு இடத்தில் குற்றம் செய்து விட்டு பிற இடத்திற்கு தப்பி செல்லும் சூழல் இருந்து வந்த நிலையில் தற்போது இந்த இரு காவல் நிலையங்களும் மாநகர காவல்துறையுடன் இணைக்கப்படும் போது அது போன்ற சுழல் இருக்காது என்றார். மாநகரப் பகுதிகளில் அதிவேகமாகவும், தாறுமாற சென்ற சுமார் 500 வாகனங்களுக்கு அபராத விதிக்கப்பட்டுள்ளது என கூறிய அவர், வேகத்தை கண்டறியும் சென்சார் கருவிகள் பிற இடங்களிலும் விரிவு படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!