கரூர் அடுத்த திண்டுக்கல் to கரூர் நெடுஞ்சாலையில் சின்னமநாயக்கன்பட்டி பிரிவு டாஸ்மாக் கடை செல்லும் வழியில் வெங்கக்கல்பட்டியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான சிறிய தகரக் கொட்டகை அமைந்துள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு வரை கறிக்கடை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது.
நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் புலியூர் வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்தாயி (57) மற்றும்
அவருடன் பணிபுரியும் நபர் ஆகிய இருவரும் வண்டி சாவி காணவில்லை என மது போதையில் சண்டையிட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை சுமார் 7.00 மணி அளவில் முத்தாயி பின்னந்தலையில் ரத்தகாயத்துடன் , இறந்து சடலமாக கிடப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்டிடத் தொழிலாளியான இருவருக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக முத்தாயி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு யாரேனும் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்