திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இக்கோயிலின் குடகுழுக்கு விழாவை முன்னிட்டு ஜூன் 21 ஆம் தேதி ரக்ஷாகர ஸீதர்ஸன பூர்ணாகுதி ஹோமத்துடன் தொடங்கி ஜூன் 22 ஆம் தேதி 11 பசு மாடுகளை கொண்டு கோபூஜை நடத்தப்பட்டும், 500 க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து திருவீதி விழா நடத்தி யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றதை தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஸ்ரீராமசமுத்திரம் பகுதி காவிரி ஆற்றில் இருந்து அப்பகுதி பக்தர்களால் எடுத்துவரப்பட்ட காவிரி புனித நீர் மற்றும் கங்கை,யமுனை, கோதாவரி, நர்மதை, கிருஷ்ணா, முக்திநாத் ஆகிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரிணையும் கோயில் முன்பு அமைக்கப்பட்ட யாக சாலையில் வைத்து அகல் மஷ ஹோமம், வாஸ்து சாந்தி என இரண்டாம் கால பூஜை நடத்தி மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து புன்னியாஹாவாஜனம், மகாஷாந்தி ஹோமம், ப்ரதான ஹோமம் என மூன்று கால பூஜையும், ஞாயிற்றுக்கிழமை அக்னி சமாரோபனம், யாத்ராதானம் உள்ளிட்ட யாகவே நடைபெற்று யாக சாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று கோயிலை சுற்றி வந்து ஸ்ரீ பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் மூலஸ்தான கோபுர கலசம், பத்மாவதி தாயார் கோபுர கலசம், சக்கரத்தாழ்வார் கோயில் கோபுர கலசம் மற்றும் கோயில் முன்புள்ள சால கோபுர கலசத்திற்கும் பட்டாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதனைத் தொடர்ந்து கோயில் மூலவருக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் காட்டுப்புத்தூர் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்று வழிபட்டனர்.