திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே உள்ள மொட்டமலை பகுதியில் சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் காட்டெருமை மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. இந்த தகவல் அறிந்த துவரங்குறிச்சி வனத்துறையினர் காட்டெருமையின் உடலைக் கைப்பற்றி கால்நடை டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்து அதே இடத்தில் குழிதோண்டி புதைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது காட்டெருமைகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டதில் காயமடைந்து உயிரிழந்திருக்கலாம் என்று தெரிய வருகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.