Skip to content
Home » கஸ்தூரி அரை போதை கவர்ச்சி நடிகை….வீரலெட்சுமி…

கஸ்தூரி அரை போதை கவர்ச்சி நடிகை….வீரலெட்சுமி…

  • by Authour

இந்து மக்கள் கட்சி ஏற்பாடு செய்த பிராமணர்களுக்கு ஆதரவான கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து பேசியது சர்ச்சையானது. தனது பேச்சுக்கு கஸ்தூரி விளக்கம் அளித்த போதும், தமிழகத்தின் பல்வேறு ஊர்களின் தெலுங்கு மொழி பேசும் மக்களால் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழர் முன்னேற்ற படை என்ற கட்சியின் தலைவர் வீரலட்சுமி நடிகை கஸ்தூரி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த வீரலட்சுமி, “தமிழகத்தில் தமிழர்களுக்கும் தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கும் மோதலை உருவாக்கும் வகையிலும் இரு சமூகங்களுக்கு இடையே பிரச்சனையை உருவாக்கிட வேண்டும் வகையில் கவர்ச்சி நடிகை கஸ்தூரி பேசி வருகிறார். இப்படி சில மாதங்களுக்கு முன்பாக சீமான் தெலுங்கு மொழி பேசுகின்ற அருந்ததிய மக்களை இழிவு படுத்தி பேசினார். அது சம்பந்தமாக காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தது. நடிகை கஸ்தூரியின் சீமானும் ஒன்றுதான். இருவரும் கிளாஸ்மேட்.

அமைதிப்படை திரைபடத்தில் கஸ்தூரி தாயம்மா கதாபாத்திரத்தில் நடித்த போது பேசியிருந்தால் எடுபட்டிருக்கும், ஆனால் இப்போது கஸ்தூரி ஆயம்மாகிவிட்டார். அவர் அரைகுறை ஆடையுடன் ஆடிய அரை போதை கவர்ச்சி நடிகை. நான் எல்லா நடிகைகள் குறித்தும் இதுபோன்று பேசவில்லை. சினிமா வாய்ப்புகள் ஓய்ந்த பின்பு தன்னை பிரபலப்படுத்தி கொள்வதற்காகவும் தேவையற்ற மோதலை உருவாக்குவதற்காகவும் தன்னை தமிழச்சி என காண்பித்துக் கொண்டு இப்படி கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேசுவதால் கஸ்தூரியை அப்படித்தான் அழைப்பேன். தன்னை தமிழச்சி என்று கூறி வரும் கஸ்தூரி, கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று நான் சொல்வது போல் அவர் சொல்வாரா?” என கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *