கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் ஸ்ரீமதி கண்ணம்மாள் நினைவு விளையாட்டு கழகத்தின் சார்பில் கரூர் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவர்களுக்கான சதுரங்க போட்டியினை பள்ளியின் தலைவர் சத்ய நாராயணன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.
சதுரங்க போட்டியில் 8,10,13,17 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டி தனித்தனியாக நடைபெற்றது இந்த போட்டி 7 சுற்றுகளாக நடைபெற்றது.
சதுரங்கப் போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் 500 க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற 160 வெற்றியாளர்களுக்கு வெற்றிக் கோப்பைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.