ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இன்று நடந்த மீனவர் நல மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
பிரதமர் மோடி ஆட்சி பலவீனமாக இருப்பதால் மீனவர்கள் மீதான இலங்கை படை தாக்குதல் தொடர்கிறது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 74 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். 83 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு ஒன்றிய பாஜக ஆட்சியே பொறுப்பு
ஒவ்வொரு முறையும் ஒன்றிய அரசுக்கு நான் கடிதம் எழுதிய பிறகுதான் நடவடிக்கை எடுக்கின்றனர் . 2014, 2015, 2016-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல் தொடர்கிறது. ஒவ்வொரு முறையும் ஒன்றிய அரசுக்கு நான் கடிதம் எழுதிய பிறகுதான் நடவடிக்கை எடுக்கின்றனர்.
மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும். பிரதமர் சென்னைக்கு வரும்போதெல்லாம் இந்த பிரச்சனை குறித்து கோரிக்கை வைத்துள்ளோம். அண்மையில் இலங்கை அதிபர் இந்தியா வந்தபோதும் கச்சத்தீவை மீட்கக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். கச்சத்தீவை திமுக அரசு தாரை வார்த்து விட்டதாக வரலாறு தெரியாமல் உளறுகிறார்கள். கச்சத்தீவு இந்தியாவுக்குத்தான் சொந்தம் என்பதை உறுதிசெய்யும் அறிக்கையை 1973-ல் கலைஞர் வெளியிட்டார்.
கலைஞரின் எதிர்ப்பை மீறிதான் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க போடப்பட்டது ஒப்பந்தம் மட்டுமே. சட்டம் அல்ல. கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட பிறகும் பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து கச்சத்தீவை மீட்க கலைஞர் வலியுறுத்தினார். கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாக எந்த காலத்திலும் இருந்ததில்லை. 1954ல் இலங்கை வெளியிட்ட வரைபடத்திலும் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமில்லை என்ற தகவல் வெளியானது. கச்சத்தீவு இந்தியாவின் ஒருபகுதி என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை திரட்டி ஒன்றிய அரசுக்கு அளித்தவர் கலைஞர் .
ககச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததால் தமிழ்நாட்டுக்குத்தான் முதல் ஆபத்து என்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார் முரசொலி மாறன். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு செவி சாய்க்காததால் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். கச்சத்தீவை மீட்கக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றினார் கலைஞர். கச்சத்தீவை மீட்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் மாபெரும் போராட்டத்தை நடத்தியது திமுக.
கச்சத்தீவுக்காக நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அதிமுகதான். தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் விஷயத்தை அதிமுக எப்போதும் தெளிவாக செய்கிறது .
இலங்கைக்கு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதாக கச்சத்தீவை பற்றி அடிப்படை அறிவு இல்லாமலும் குறைந்தபட்ச நேர்மை இல்லாமலும் அடிப்படை அறிவில்லாமலும், கச்சத்தீவு குறித்து உண்மைக்கு மாறாக சிலர் பேசி வருகின்றனர் .
இந்தியாவின் ஒரு பகுதியை மாநில அரசான திமுக தாரைவார்த்தது என அடிப்படை அறிவின்றி பேசுகின்றனர். கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கையில் ஒன்றிய அரசு ஈடுபட வேண்டும். கச்சத்தீவை மீட்டெடுத்து தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையைக் காக்க வேண்டும்.கச்சத்தீவை மீட்டு மீனவர்களின் உரிமையை காப்பதில் திமுக உறுதியாக உள்ளது .
இவ்வாறு அவர் பேசினார்.