ஜம்மு காஷ்மீரில் இன்று 2ம் கட்ட தேர்தல் நடந்து வருகிறது. 6 மாவட்டங்களில் உள்ள 26 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காலை 7 மணிக்க வாக்குப்பதிவு தொடங்கியது. ஆரம்பம் முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 9 மணிக்கு 10.22%, 11 மணிக்கு 24.10%, பிற்பகல் 1 மணிக்கு 36.93% வாக்குகள் பதிவானது. மதியம் 2 மணிவரை எந்தவித அசம்பாவிதமும் இன்றி தேர்தல் அமைதியான முறையில் நடந்ததாக தகவல்கள் கூறுகிறது. தேசிய மாநாட்டு கட்சித் தலைவர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் இன்று வாக்களித்தனர்.