ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதுகாப்பு படையியினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். எனவே தேடுதல் நடவடிக்கை என்கவுன்டராக மாறியது. இதனால், பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி பதிலடி கொடுத்தனர். இந்த சம்பவத்தில் 5 பயங்கரவாதிகள் உயிரிழந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.