ஜம்மு காஷ்மீருக்கு சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி வென்று ஆட்சியை கைப்பற்றியது. ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்க கோரி அந்த கட்சி கோரிக்கை விடுத்து வந்தது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை வழங்க கோரும் தீர்மானம் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் நேற்று கொண்டுவரப்பட்டது. காஷ்மீர் துணை முதல்வர் சுரேந்தர் சவுத்திரிஇந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார். அப்போது எதிர்க்கட்சி தலைவரும், பாஜக உறுப்பினருமான சுனில் சர்மா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். சிறப்பு அந்தஸ்து தீர்மானத்தை தாக்கல் செய்தது விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், இது குறித்து அவையில் விவாதிக்க கூடாது என்றும் கூறினார்.
தீர்மானத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருதரப்பினரும் கோஷம் எழுப்பியதால் அவையில் கடும் அமளி நிலவியது. இந்த அமளிக்கு இடையே காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரும் தீர்மானம் அவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை சட்டமன்றம் கூடியதும் தேசிய மாநாட்டு கட்சி எம்.எல்.ஏ. குர்ஷித் அகமது சிறப்பு அந்தஸ்து கோரும் வாசகங்கள் அடங்கிய பேனரை தூக்கி காட்டினார். இதற்கு பாஜக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவரை தாக்க முயன்றனர். இதனால் ஒருவரை ஒருவரை கைளால் தள்ளிக்கொண்டனர். தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவரை தாக்கி ஒருவர் கோஷம் போட்டதால் அமளி ஏற்பட்டது.
அமளியில் ஈடுபட்டவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதனால் சபை காவலர்கள் வந்து குண்டு கட்டாக அவர்களை வெளியேற்றினர்.