கரூர் உழவர் சந்தையில் ஒரு வாரத்திற்கு பிறகு 10 ரூபாய் விலை குறைந்த தக்காளி – இஞ்சி, சின்ன வெங்காயம், அவரை என காய்கறிகள் விலை ஏறுமுகமாக உள்ளது. கரூர் மாநகரக்குட்பட்ட உழவர் சந்தையில் தக்காளி கடந்த ஒரு வாரமாக ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையானது இந்த நிலையில் இன்று ஒரு கிலோ தக்காளி பத்து ரூபாய் குறைந்து 90 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தக்காளி விலை குறைந்தது என்று பொதுமக்கள் நிம்மதி அடைந்தாலும் காய்கறிகள் விலை தொடர்ந்து ஏறுமுகமாக
உள்ளது ஒரு கிலோ இஞ்சி 300 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 130 ரூபாய்க்கும், கோழி அவரை 120 ரூபாய்க்கும் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காய்கறிகள் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.