கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் TATA ACE கனரக வாகனத்தை ஓட்டி வந்த ஆட்டோ ஓட்டுனர் இருசக்கர வாகனங்கள் மீது லேசாக மோதியதால், வாகன ஓட்டிகள் அவரை பின் தொடர்ந்து துரத்தி வந்துள்ளனர்.
இதனால் பதற்றமடைந்த ஆட்டோ ஓட்டுநர் தாறுமாறாக வாகனத்தை இயக்கியதால், கரூர் – திருச்சி பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மீது மோதியதோடு, அவ்வழியாக வந்த அரசு பேருந்தின் பின்பகுதியில் ஆட்டோவானது மோதி நின்றது. இதில் கனரக ஆட்டோவின் முன்பகுதி சேதமடைந்தது. மேலும்,
இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞருக்கு படுகாயம் ஏற்பட்டு, அவர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து தாறுமாறாக ஆட்டோவை இயக்கிய ஓட்டுநரை பொதுமக்கள் கரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வாகன ஓட்டுனர் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது விபத்து குறித்து நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கனரக ஆட்டோ அரசு பேருந்து மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.