கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தெரசா கார்னர் பகுதியை சேர்ந்தவர் யுகேந்திரன் மற்றும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் ஆகிய இருவரும் கரூரில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் லோடுமேனாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் அடுத்த வடக்குபாளையம் பகுதியில் உள்ள ரவிச்சந்திரன் என்பவர் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த XL சூப்பர் இருசக்கர வாகனத்தை இருவரும் எடுத்து செல்ல முயன்று, தள்ளிக் கொண்டு மெயின் ரோடு வரை சென்றுள்ளனர்.
அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து பெண்கள் கூச்சலிட்டதை பார்த்து வாகனத்தை கீழே போட்டுவிட்டு இருவரும் தப்பி ஓடிய போது அக்கம் பக்கத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் விரட்டிப் பிடித்த போது யுகேந்திரன் மட்டும் மாட்டிக்கொண்ட நிலையில், பாலமுருகன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
அதனையடுத்து அருகில் உள்ள மின்கம்பத்தில் யுகேந்திரனை கட்டி வைத்த ஊர் பொதுமக்கள் பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் யுகேந்திரனை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை கொள்ளையர்கள் திருட முயற்சி செய்த சம்பவம் ரவிச்சந்திரன் வீட்டு சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அடிக்கடி இதேபோல் தங்கள் பகுதியில் திருட்டு சம்பவம் நடைபெறுவதாக ஊர் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.