கரூர் அடுத்த அரசு காலனி தங்கராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் ரூபிதா பானு (50). கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் சிராஜுதீன் இறந்துவிட்டார். இவரது மகள் திருமணமாகி குடும்பத்தினருடன் வெளியூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் கணவர் இறப்புக்கு பின் ராஜேந்திரன் என்ற நபருடன் கடந்த 10 ஆண்டுகளாக ரூபிதாபானு தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை ரூபிதா பானுவை சந்திக்க அவரது வீட்டிற்கு ராஜேந்திரன் வந்துள்ளார். அப்போது இருவருக்கும்
இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியுள்ளது. இதில் ராஜேந்திரன், ரூபிதா பானுவை கீழே தள்ளி சரமாரி தாக்கினார். இதில் ரூபிதாபானு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது சம்பந்தமாக தகவல் அறிந்த வெங்கமேடு போலீசார் ராஜேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.