Skip to content

கரூரில் விநாயகர் சிலை கூடங்களுக்கு வைக்கப்பட்ட சீல் நிபந்தனைகளுடன் அகற்றம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் வட மாநிலத் தொழிலாளர்கள் ரசாயன பொருட்களைக் கொண்டு விநாயகர் சிலைகள் செய்வதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அதிகாரிகள் மூன்று சிலை கூடங்களுக்கு சீல் வைத்தனர். இது தொடர்பான வழக்கில் நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை பல்வேறு நிபந்தனைகளுடன் சிலை விற்பனை செய்ய உத்தரவிட்டு தடையை நீக்கியது.

இதையடுத்து கரூரில் விநாயகர் சிலை கூடங்களுக்கு வைக்கப்பட்ட சீல் இன்று அதிகாலை அதிகாரிகள் மூலம் அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்து வட மாநில தொழிலாளர்கள் விநாயகர் சிலை விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். சிலை வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் ஆறு மற்றும் நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க கூடாது, உள்ளிட்ட அரசு விதித்துள்ள பல்வேறு நிபந்தனைகளை எடுத்துரைத்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும், விநாயகர் சிலை விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சீல் அகற்றப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மேலும் குறிப்பாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து விநாயகர் சிலை செய்வதற்காக கொடுத்த நபர்கள் சிலை தயாரிக்கும் குடத்திற்கு சீல் வைத்த காரணத்தினால் வெளியில் சிலை வாங்கி விட்டதாகவும் பல்வேறு சிலைகள் தேக்கமடைந்ததாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!