கரூர், அரசு அருங்காட்சியகம் மற்றும் கரூர் தொல்லியல் துறை இணைந்து உலக பாரம்பரிய வார விழாவையொட்டி நடத்திய ‘படம் பார்த்து கதை சொல்’ நிகழ்வின் பரிசளிப்பு விழா இன்று கரூர், அரசு அருங்காட்சியகத்தில் காப்பாட்சியர் மணிமுத்து தலைமையில் நடைபெற்றது. கேட்கப்பட்ட புகைப்படக் கேள்விகளுக்கு சரியான பதிலை ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் அளித்ததால்,
போட்டியின் வெற்றியாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் கரூர் மாவட்ட துணை சுற்றுலாத்துறை அலுவலர் காமில் அன்சாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்வின்போது படம் பார்த்து கதை சொல் போட்டியில் கேட்கப்பட்ட புகைப்பட கேள்விகளுக்கு விடைகள் விளக்கமாக பார்வையாளர்களுக்கு கூறப்பட்டது.