கரூர் வாங்கலை சேர்ந்த பிரகாஷ் என்பவரை மிரட்டி அவரது 100 கோடி ரூபாய் நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருடன் போலி பத்திரம் தயாரிக்க உடந்தையாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் விஜயபாஸ்கர் மீது மேலும் 2 பிரிவில் இப்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். அதாவது ஆள் கடத்தல், கொலை மிரட்டல் ஆகிய 2 பிரிவுகளில் இப்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் அவரை நாளை கரூர் கோர்ட்டில் ஆஜர் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இதே பிரிவுகளில் பிரவீன் என்பவரும் மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளார். இதனால் விஜயபாஸ்கருக்கு ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும், அடுத்த வழக்கில் அவர் சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.