கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்களை வைத்து, மோசடியாக பதிவு செய்ததாக சார்பதிவாளர் அளித்த புகாரின் பேரில், பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் கரூர் மாஜி விஜயபாஸ்கர், வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 22-ஆம் தேதி கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விஜயபாஸ்கரை 2 நாள் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த 2 நாள் விசாரணை முடிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட விஜயபாஸ்கரை கொலை மிரட்டல், ஆள் கடத்தல் வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்த வாங்கல் போலீசார் அனுமதி கேட்டனர். அவர்களுக்கு ஒரு நாள் அனுமதி கிடைத்தது. ஒரு நாள் கஸ்டடி முடித்து விஜயபாஸ்கரை நேற்று மாலை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வாங்கல் போலீசார் தங்களுக்கு மேலும் 4 நாட்கள் விஜயபாஸ்கரை கஸ்டடியில் வைத்துவிசாரிக்க அனுமதிக்க வேண்டும் என நீதிபதியிடம் கேட்டனர். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி 1 நாள் விசாரணை நடத்த அனுமதியளித்தார். முன்னதாக சொத்தின் அசல் ஆவணங்கள் தொலைந்து விட்டதாக போலியாக சான்று வழங்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சேலம் மத்திய சிறையில் உள்ள வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 2 நாட்கள் சிபிசிஐடி போலீசார் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
தொடரும் போலீஸ் விசாரணை… அவருக்கு 2 நாள்.. இவருக்கு இன்னும் ஒரு நாள்..
- by Authour
