Skip to content
Home » அதிமுக பிரமுகர் தென்னந்தோப்பில் கரூர் விஜயபாஸ்கர் தஞ்சம்?..

அதிமுக பிரமுகர் தென்னந்தோப்பில் கரூர் விஜயபாஸ்கர் தஞ்சம்?..

  • by Senthil

கரூர் மாவட்டம், மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல்காதர் கரூர் நகர போலீசில் கொடுத்த புகாரில், போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்த ரகு என்பவர் மீதும், இந்த விவகாரத்தில் தன்னை மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். சம்மந்தப்பட்ட இடம் 22 ஏக்கர் நிலம் ஆகும். மேலும் அதன் மதிப்பு ரூ.100 கோடி மதிப்புடையது. இதன் காரணமாக சார்பதிவாளரின் புகாரின் மீது கரூர் நகர போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கினர். இந்தநிலையில் கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் டவுன் போலீஸ் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் அளித் புகாரில்  தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆகியோர் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த மிரட்டல் சம்பவத்தில் நேரடி தொடர்பு காரணமாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையை 3வது முறையாக ஒத்தி ஒத்திவைத்த கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் நேற்றைய தினம் விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக பல்வேறு இடங்களில் ஒடி ஓளிந்திருக்கும் விஜயபாஸ்கர் தற்போது திண்டுக்கல் அதிமுக பிரமுகர் ஒருவரின் தென்னந்தோப்பில்  ஒளிந்திருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!