கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட வெண்ணைமலை பகுதியில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் புதிய கிளை பெயர் பலகை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் விஜய் மக்கள் இயக்க கரூர் மாவட்ட தலைவர் மதியழகன் கலந்து கொண்டு புதிய பெயர் பலகையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து இனிப்புகள் வழங்கினார். அப்போது சிறுவர், சிறுமிகள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்
பெயர் பலகை திறப்பு விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் 50 பேருக்கு இலவச நோட்புக், பேனா, பென்சில்கள் வழங்கப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்
கரூர் ஒன்றிய தலைவர் அரவிந்த், வெண்ணைமலை கிளை தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட விஜய் ரசிகர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.