கரூரில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் இந்திய வருவாய் சேவை மற்றும் திருச்சி வருமான வரி இணை ஆணையர் புவனேஸ்வரி தலைமையில் முன்கூட்டியே வருமான வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி வருமானவரித்துறை அலுவலர் முத்துகிருஷ்ணன், கரூர் வருமானவரித்துறை அலுவலர் வள்ளியம்மை, கரூர் வர்த்தக சங்க தலைவர் ராஜு, செயலாளர் வெங்கட்ராமன், வி. கே.ஏ. குரூப் கம்பெனி சேர்மன் சாமியப்பன் வியாபாரிகள், தொழில் முனைவோர், பட்டையதாரர்கள் , வருமான வரி அலுவலக ஆய்வாளர் மீனாட்சி, நிர்வாக அலுவலர் சிங்காரவேல், அலுவலக கண்காணிப்பாளர் கார்த்திக், மாதையன், சுகுமார் மற்றும் கோபி என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சிறப்புரையாற்றிய திருச்சி வருமான வரி இணை ஆணையர் புவனேஸ்வரி, மாத சம்பளம் வாங்குவோர், தொழில் முனைவோர், ஏற்றுமதியாளர், வியாபாரிகள் அரசுக்கு முறையாக வரி செலுத்துவதை எளிமைப்படுத்தும் வகையிலும் வரி செலுத்துவோர், சுமைகளை சுமக்காமல் இருப்பதற்காகவும் வருடத்தில் ஜூன், செப்டம்பர், டிசம்பர், மார்ச் என வருடத்திற்கு நான்கு முறை எளிமையாக வரி செலுத்தும் முறையை அரசு அறிமுகப்படுத்தி நடைமுறையில் உள்ளது. வரி செலுத்துவோர் மொத்த வருவாயில் ஜூன் மாதத்தில் 15 சதவீதம், செப்டம்பர் மாதத்தில் 45 சதவீதமும், டிசம்பர் மாதத்தில் 75 சதவீதம், மார்ச் மாதத்தில் 100% வரியையும் செலுத்த வேண்டும்.குறிப்பிட்ட காலத்தில் வரியை செலுத்தாவிட்டால் செலுத்த வேண்டிய தொகைக்கு ஒரு சதவீதம் வரி செலுத்த நேரிடும். எனவே வரி செலுத்துவோர் இதனை உணர்ந்து குறிப்பிட்ட காலத்துக்குள் வரியை செலுத்தி வட்டிகட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.