துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முனியப்பன் கோவில் ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள ஆட்டோக்கள் ஒரு நாள் இலவச ஆட்டோ பயணம் திமுகவின் தொடங்கி வைத்தனர்.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் திமுகவினர் நலத்திட்டங்கள் மற்றும் உணவுகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கரூர் திருக்காம்புலியூர் அருகே உள்ள முனியப்பன் கோவில் பகுதியில் திமுக பொறியாளர் அணி செல்வகுமார், அருண், இளம் கவி ஏற்பாட்டில் தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர் கலந்துகொண்டு முனியப்பன் கோவில் பகுதியில் உள்ள அனைத்து ஆட்டோக்களும் துணை முதல்வர் பிறந்த நாளை
முன்னிட்டு இன்று ஒரு நாள் இலவசமாக பொதுமக்கள் பயணம் செய்யும் வகையில் தொடங்கி வைத்தனர்.
அங்கிருந்த பொது மக்கள் ஆட்டோவில் ஏறி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணம் செய்தனர். அதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சட்டை,வேஷ்டி, சேலைகள் உடன் இணைப்புகள் வழங்கி துணை முதல்வர் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் கரூர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுகவினர் பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகின்றனர்.