கரூர் மாவட்டம், தான்தோன்றி கிராமம், அருள்மிகு ஊரணி காளியம்மன் ஆலயத்தில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு காளியம்மன் திருத்தேர் என்று புறப்பாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு தான்தோன்றி மலை ஊரணி காளியம்மன் ஆலயத்தில் இருந்து மேல தாளங்கள் முழங்க ஊரணி காளியம்மன் உருவம் பதித்த பட்டாடையுடன் திருத்தேர் பவனி விழா சிறப்பாக தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை தான்தோன்றி கிராமம், ஆதி மாரியம்மன் குடித்தெரு பகுதியில் ஊரணி காளியம்மன் திருத்தேர் வந்தது. அதை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் காளியம்மன் திருத்தேருக்கு மஞ்சள் நீர்
ஊற்றி, தேங்காய் பழம் வைத்து தங்களது நேர்த்திக்கடனை செய்தனர். அதைத் தொடர்ந்து அங்கிருந்து ஊரணி காளியம்மன் திருத்தேர் அருகிலுள்ள ஊருக்கு சென்றது. தொடர்ந்து இன்று இரவு வரை பல்வேறு ஊர்களில் ஊரணி காளியம்மன் திருத்தேர் பவனி விழா நடைபெற்று, அதன் தொடர்ச்சியாக இரவு தான்தோன்றி மலை, முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு திருத்தேர் வந்தடையும், இன்று முதல் நாள் திருத்தேர் பவனி விழா நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் வழியிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.