கடந்த சில நாட்களாக வேகமாக விலையேற்றம் அடைந்து வரும் தக்காளியின் விலையினை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு நியாமான விலையில் கிடைக்கும் வகையில் தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் இயங்கி வரும் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை – விற்பனை மையம் மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் முதற்கட்டமாக
300 கிலோ தக்காளி விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு கிலோ ரூபாய் 80/- என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது ஏராளமான பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு தக்காளியை வாங்கினர்
, தோட்டக்கலை துணை இயக்குநர் மணிமேகலை விற்பனையை துவங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் தோட்டக்கலை உதவி இயக்குநர்(.பொ) சுதாகாவேரி தோட்டக்கலை உதவி இயக்குநர்,கவிதா தாந்தோணி வட்டாரம், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் நவீன், யுவராஜ், உதவி வேளாண் அலுவலர், வணிகம் இராகலைச்செல்வன் மற்றும் சதீஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.