Skip to content

கரூர்…. கண்பார்வையற்ற மாற்றுதிறனாளி பெண்ணிற்கு உதவிய இரண்டு பெண் போலீஸ்….

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு இரண்டு பெண் காவலர்கள் வழிகாட்டியாக உதவிய நெகிழ்ச்சியூட்டும் காட்சி வைரலாகி வருகிறது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட அளவில் பல்வேறு ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறைகளை மனுக்களாக வழங்கினர்.

கரூர் மாவட்டம், தோகைமலையை அடுத்த ஆலந்தூர் பகுதியை சார்ந்த சந்தோஷம் என்ற பெண்மணி, இரண்டு கண்களும் பார்வையற்ற நிலையில், குச்சி கொண்டு நடந்து செல்ல, அவருக்கு கரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தினை சேர்ந்த உதவி காவல்துறை ஆய்வாளர் சாந்தி, தலைமைக்காவலர் ரேவதி ஆகிய இருவரும், மாற்றுத்திறனாளி பெண்மணிக்கு வழிகாட்டியாக மாறி, கலெக்டர் அலுவலத்திலிருந்து வெளியே பேருந்து நிறுத்தம் வரை குச்சியை கைகளால் பற்றி அழைத்து சென்றனர்.

மேலும், அந்த பெண்மணியை இரு பெண் காவலர்களும் மினி பேருந்திற்குள் ஏற்றி விட்டதோடு, அந்த பேருந்து ஓட்டுநரிடம் பாதுகாப்பாக இறக்கி விட வேண்டும் என்று சொன்னதையடுத்து, 2 காவலர்களுக்கும் சந்தோஷம் நன்றி கூறிய காட்சிகளும் வைரலாகி வருகிறது.

error: Content is protected !!