கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பகுயில்உள்ள வளாகத்தில் இன்று சுற்றுச்சூழல் கால நிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் உலக இயற்கை பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டத்தில் உலக இயற்கை
பாதுகாப்பு நாள் கொண்டாடபடும் இந்த இனிய தினத்தை முன்னிட்டு இன்று கரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் 5000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடக்கூடிய ஒரு விழா இன்று தொடங்கியுள்ளது. இதில் நாட்டு மரக்கன்றுகளான வேம்பு, அரசு, ஆல், அத்தி, நாவல், உசில், ஆச்சா, புங்கன், மந்தாரை, மகிழம், சரக்கொன்றை முதலியன நடப்படவுள்ளன. இந்த மரக்கன்றுகள் நடும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றார்.