தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் வாட்டி வைத்து வருகிறது, இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் மேல் வெப்பம் கடந்த ஒரு சில தினங்களாக பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் போக்குவரத்தை சரி செய்வதற்காக போக்குவரத்துக் காவலர்கள் வாட்டி வதைக்கும் வெயிலில் பணியாற்றி வருகின்றனர். காவலர்கள் வெயிலில் நின்றவாறு போக்குவரத்தை சரி
செய்யும் பணியில் ஈடுபட்டு வருதால் வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் நீர்மோர், எலுமிச்சம்பழம் ஜூஸ் உள்ளிட்டவைகளை வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் காவலர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். கோடைகால வெயில் நிறைவடையும் வரை போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கப்படும் என மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.