கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவகர்பஜார் பகுதி மாநகரின் மையப் பகுதியாக உள்ளது. இந்த கடை வீதியில் துணிக்கடை, நகை கடை, பாத்திர கடைகள் உள்ளிட்ட கணக்கான வணிக வளாகங்களும், வட்டாட்சியர் அலுவலகமும் அமைந்துள்ளன.
வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் தனியார் துணிக்கடை ஒன்று அமைந்துள்ளது. அந்த கடையின் பெயர்
பலகை வைக்கப்பட்டுள்ள இரும்பு பைப்புக்குள், 1 அடிக்கும் குறைவான உடும்பு குட்டி ஒன்று சிக்கிக் கொண்டது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள, கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பெயரில் அங்கு வந்த தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் உடும்பு குட்டியை பாலித்தீன் பை ஒன்றில் லாவகமாக பிடித்து, பத்திரமாக எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.