கரூர் மாவட்டம் மாயனூர் பெட்ரோல் பங்க் அருகே கோவையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி,லாரியில் தனியார் நிறுவனத்தின் (Exo) பாத்திரம் துலக்கும் சோப்பு ஏற்றி வந்தது. இரவில் பயணம் செய்து ஓட்டி வந்த ஓட்டுநர் ஆபிரகாம் ( 42 ) உறங்குவதற்காக மாயனூர் அருகே ஒரங்கட்டி இருந்தார். இதனிடையில் பின்னால் வந்த டிப்பர் லாரி அதிவேகமாக நின்று கொண்டு வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. அப்போது சோப்பு லோடு லாரி பாய்ந்து அருகில் இருந்த மின் டிரான்ஸ்பர் மீது மோதி முட்டி நின்றது. இந்த நிலையில் லாரியில் ஏற்றி வந்த பாத்திரம்
துலக்கும் சோப்பு சாலையில் சிதறி கொட்டி கிடந்தது. மின் ட்ரான்ஸ்பர் மீது முட்டி நின்றதால் டிரான்ஸ்பார்மர் சாயாமல் அப்படியே நின்றது. இதனால் மின் ஒயர்கள் அருந்து கீழே விழவில்லை. இதனால் பெரு விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தை அறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.