தமிழகம் முழுவதும் நாளை தமிழர் திருநாள் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ளது . இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோருக்கு பச்சரிசி,வெல்லம்,கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு தமிழ் மாநில காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாட்ராயன் முன்னிலையிலும் மேற்கு மாவட்ட தலைவர் திருமூர்த்தி தலைமையில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில்
தமிழ மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சிங்காரம் ஜெகநாதன் ராமசாமி ,முத்துகுமரன் பாஜக மாவட்ட செயலாளர் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.