கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ சபரி ராஜன் ஐயப்ப சேவா அறக்கட்டளையின் சார்பாக பதினோராம் ஆண்டு அன்னதான விழாவை முன்னிட்டு இரண்டாம் ஆண்டு திருவிளக்கு பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றது.
திருவிளக்கு பூஜையை முன்னிட்டு அப்பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் திரளாக வந்திருந்தனர். அதை தொடர்ந்து ஸ்ரீ சபரி ராஜன் ஐயப்பா சேவா அறக்கட்டளையின் சார்பாக திருவிளக்கு
பூஜைக்கு தேவையான வாழை இலை, நெய், விளக்கு திரி, வெற்றிலை, பத்தி, சூடம், மஞ்சள், குங்குமம் மற்றும் வளையல், ஜாக்கெட் பிளவுஸ் உதிரிப்பூக்கள் ள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.
அதை தொடர்ச்சியாக சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் கூறியபடி 1008 போற்றி பாடலை பாடி திருவிளக்கு பூஜையை சிறப்பாக நடத்தினர்.
கரூர், பசுபதிபாளையம் ஸ்ரீ சபரி ராஜன் ஐயப்பா சேவா அறக்கட்டளையின் 11ஆம் ஆண்டு அன்னதான விழாவில் இரண்டாம் ஆண்டு திருவிளக்கு பூஜையில் 200-க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.